நெற்பயிரில் சொட்டு நீர்ப் பாசன முறை பயன்படுத்துவது குறித்த சர்வதேச ஆய்வுக் கருத்தரங்கம் கோவை தமிழ் நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தில் இன்று முதல் 3 நாட்களுக்கு நடைபெறுகிறது.
குறைந்த நீரைப் பயன்படுத்தி அதிக விளைச்சல் தரக்கூடிய தொழில் நுட்பத்தைக் கோவை வேளாண் பல்கலைக்கழகம் பல்வேறு பயிர்களில் செயல்படுத்தி வருகிறது. இதன் படி நெற்பயிரிலும் சொட்டு நீர் பாசன முறையைப் பயன்படுத்துவது குறித்த ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த ஆய்வு குறித்து தனியார் நிறுவனத்துடன் இணைந்து கோவை வேளாண் பல்கலைக்கழகம் இந்தக் கருத்தரங்கை நடத்தி வருகிறது. நீர் மற்றும் உர மேலாண்மை தொழில் நுட்பங்களை ஆய்வு செய்யவும், தொழில் நுட்பத்தில் உள்ள இடையூறு குறித்து கலந்து ஆலோசிக்கவும் இக்கருத்தரங்கம் நடைபெறுகிறது. இதில் இந்தியா, இஸ்ரேல், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த விஞ்ஞானிகள் கலந்து கொள்கின்றனர்.
0 comments:
Post a Comment